செக்க சிவந்த வானம் வெற்றி படமா ?
செக்க சிவந்த வானம் 27 செப்டம்பர் 2018 அன்று திரையரங்கில் வெளியானது .இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன், அருண் விஜய், விஜய் சேதுபதி, தியாகராஜன், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ் ஹைதாரி, ஐஸ்வர்யா ராஜேஷ், உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் .மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருந்தனர் .
இந்த விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது, நடிகர்களின் நடிப்பு , இயக்கம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது . ஆனால் வலுவான பெண் கதாபாத்திரங்கள் இந்த படத்தில் இல்லை என்று விமர்சித்து இருந்தார்கள் சிலர் . மேலும் இந்த படம் மல்டி ஸ்டார் படம் என்ற காரணத்தால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது . அந்த எதிர்பார்ப்பை படம் பெரும்பாலும் பூர்த்தி செய்தது என்று தான் சொல்ல வேண்டும் .
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார் மேலும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து இருந்தார் .ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்து இருந்தார் .இந்நிலையில் செக்க சிவந்த வானம் வானம் படத்தை 40 கோடி ரூபாய்க்கு தயாரித்து இருந்தது மெட்ராஸ் டாக்கீஸ் . இந்த படம் 58 கோடி வசூல் செய்து வெற்றி படமாக அமைந்து உள்ளதாக கூறப்படுகிறது ..

Comments
Post a Comment