ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் சொன்ன அட்வைஸ் !

முதல்ல இத செய்யுங்க ....ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் சொன்ன அட்வைஸ் !


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார்  . S.J.சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார் . பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து  இருந்தார்.


டான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . இந்த படம் மே மாதம் 13-ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது.






இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் படத்தில்  நடிக்க தொடங்கினார்   சிவகார்த்திகேயன் . இந்த படத்தின் படப்பிடிப்பு  பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் நடந்து முடிந்தது   . தமன் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . படத்தின் டிரைலர்  வெளியாகி ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . படம் வருகின்ற அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது


இந்நிலையில் சமீபத்தில்  பிரின்ஸ் படத்தின் ட்ரைலர் லான்ச் விழா சென்னையில் நடந்தது இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார் . முதலில் உங்களது வாழ்க்கையை  கொண்டாடுங்கள் , பிறகு உங்கள் குடும்பத்தை கொண்டாடுங்கள் , அதுக்கு பின் என்னை கொண்டாடுங்கள் என்று சிவகார்த்திகேயன் அறிவுரை வழங்கி உள்ளார் . மேலும் யார் சொல்றத பத்தியம் கவலை படவேண்டாம் , அடுத்த என்ன பண்ணலாம் யோசிச்சா வெற்றி தான் அடுத்தவனை என்ன பண்ணலாம் நினைச்சா  வெற்றி கிடைக்காது என்று தெரிவித்துள்ளார் .


சிவகார்த்திகேயனின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது மேலும் இந்த தற்போது  வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகிறது .


Comments