கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு : பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் சிறையில் அடைப்பு!!
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான தனியார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார்,முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி உள்ளிட்ட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 5 பேரையும் 15 நாட்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு காரணமான 113 பேரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!!
சென்னை, மெரினா கடற்கரையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக மெரினாவில் ஏராளமானோர் கூடப்போவதாக தகவல் பரவியுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரப்பிய 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று
திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வளாகத்தில் 3வது நாளாக போலீசார் குவிப்பு
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வளாகத்தில் 3வது நாளாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவி தற்கொலையை தொடர்ந்து வெடித்த கலவரத்தில் பள்ளி சூறையாடப்பட்டது. 3வது நாளாக பள்ளி வளாகத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்ட கூடாது : டிஜிபி உத்தரவு
காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் இருந்து போலீஸ் என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை . அனுப்பியுள்ளார் அதில் தமிழகத்தில் உள்ள காவல்துறை உயரதிகாரிகள் அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடிக்க சென்ற மூவர் வெள்ளத்தில் அடித்து சென்றதால் பெரும் பரபரப்பு
கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்க சென்ற மூவர் வெள்ளத்தில் அடித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரியலூர் மாவட்டத்திற்கு வரும் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை
அரியலூர் மாவட்டத்திற்கு வரும் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.26ம் தேதி ஆடி திருவாதிரையில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதால் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு 80- ஆக வீழ்ச்சி
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் ரூ.80ஐ தொட்டது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசு அதிகரித்து ரூ.80.05ஆக சரிவை கண்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக விசாரணை
கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி எஸ்.பி. ஜியாவுல் ஹக் தலைமையில் ஏடிஎஸ்பி கோமதி உள்ளிட்ட போலீசார் விசாரணையை தொடங்கின.








Comments
Post a Comment