!!செங்கல்பட்டு-பீச் ஸ்டேஷன்!! இடையே சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் தாமதம்??
மழை காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரயில்கள் தாமதம்
*ரயில்கள் தாமதம் காரணமாக பயணிகள் அவதி*
நேற்று இரவு சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு பெய்த லேசான மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
குறிப்பாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு நோக்கி இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மறுமார்கமாக செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வழியாக கடற்கரை நோக்கி இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு தாம்பரம் இடையே ஆங்காங்கே இன்று காலை முதல் வழியில் நிறுத்தப்பட்டது.
குறிப்பாக தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் , வண்டலூர் , கூடுவாஞ்சேரி , பொத்தேரி , மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே ரயில்கள் இரு மார்க்கத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் பள்ளி கல்லூரி மற்றும் பணிக்குச் செல்லக்கூடிய ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர் . ரயில்கள் அனைத்தும் அரை மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டதால் ரயில்களின் இயக்கம் தாமதமானது.
பின்னர் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு அரை மணி நேரத்திற்கு பிறகு தற்போது இயங்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடங்களில் பொதுமக்கள் ரயில் நிலையங்களில் பெருவாரியாக குவிந்துள்ளனர்.
.jpeg)
.jpeg)
Comments
Post a Comment